20 December 2010

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - புதன்.

புதன்.சோதிடவியலில் நான்காவது கோளாய் கருதப் படும் புதனுக்கு பல்வேறு தமிழ் பெயர்கள் வழங்கப் படுகிறது.

அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்க்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை ஆகியனவாகும்.

உரிய பால் : அலி கிரகம்.

உரிய நிறம் : பச்சை நிறம்.

உரிய இனம் : வைசிய இனம்.

உரிய வடிவம் : உயரம்.

உரிய அவயம் : கழுத்து.

உரிய உலோகம் : பித்தளை.

உரிய மொழி : தமிழ், கணிதம், சிற்பம், ஜோதிடம்.

உரிய ரத்தினம் :
மரகதம்.

உரிய ஆடை :
நல்ல பச்சை நிற ஆடை.

உரிய மலர் :
வெண்காந்தள்.

உரிய தூபம் : கற்பூரம்.

உரிய வாகனம் :
குதிரை, நரி.

உரிய சமித்து :
நாயுருவி.

உரிய சுவை : உவர்ப்பு.

உரிய பஞ்ச பூதம் :
வாயு.

உரிய நாடி : பித்த நாடி.

உரிய திக்கு : வடக்கு.

உரிய அதி தேவதை : விஷ்ணு.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.

உரிய குணம் : தாமசம்.

உரிய ஆசன வடிவம் : அம்பு.

உரிய தேசம் : மகதம்.

நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சுக்கிரன்.

பகைப் பெற்ற கோள் :
சந்திரன்.

சமனான நிலை கொண்ட கோள்கள் :
செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம்.

உரிய தெசா புத்திக் காலம் : பதினேழு ஆண்டுகள்.

புதனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3, 6, 8, 12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு :
ரிஷபம், சிம்மம், துலாம்.

பகை வீடு : கடகம், விருச்சிகம்.

ஆட்சி பெற்ற இடம் : மிதுனம், கன்னி.

நீசம் பெற்ற இடம் : மீனம்.

உச்சம் பெற்ற இடம் : கன்னி.

மூலதிரி கோணம் : கன்னி.

உரிய உப கிரகம் :
அர்த்தப்பிரகரணன்.

உரிய காரகத்துவம் : மாதுல காரகன்.

கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக் குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுகு எல்லாம் புதன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
புதந்தந்து ஆள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"பிரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம்யகம்||"

புதன் காயத்ரி..

"ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்||"


Post a Comment

1 comments:

Nila Virumbi said...

அன்பு தர்ஷிக்கு
உஙகல் ஜோதிடம் பகுதியில் கோள்கல் பற்றி படித்து வருகிறேன். கோள்களை பற்றி எழுதும்போது அதன் தானியங்கள் சேர்த்து எழுதலாமே

Post a Comment