24 October 2010

இனிய துவக்கம்!

தமிழர்களின் அரிய கலைகளில் ஒன்றான சோதிடக் கலையில் சித்தர்களின் பங்களிப்பு மகத்தானது. இந்த் கலையினை வெறுமனே மூட நம்பிக்கை என்று புறந்தள்ளாது இதன் நீள அகலங்களில் பயணித்தால் ஆச்சர்யங்கள் பலவற்றை தன்னுள்ளே பதுக்கி வைத்திருக்கிறது என்றால் மிகையில்லை.

என்னிடம் இருக்கும் பல சோதிட புத்தகங்கள் நூற்றாண்டு கண்டவை, அவற்றை பிரதியெடுக்கும் ஒரு முயற்சியாகவும் கருதி இந்த பதிவினை துவக்கியிருக்கிறேன். காலத்தே மறைந்து கொண்டிருக்கும் சோதிடத் தகவல்களை இம்மாதிரியான ஊடகங்களில் பத்திரப் படுத்துவதன் மூலம், மேலதிக ஆய்வுகளுக்கு வாய்ப்புகள் உருவாவதுடன், எதிர்கால தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்கும் ஒரு வேலையினை செய்தது போலாகும்.

இந்த பதிவின் வெற்றி அல்லது பயனாக்கம் இதை பயன்படுத்திடும் உங்களிடமே உள்ளது. எனவே உங்களின் மேலான ஆலோசனைகளும், அறிவுறுத்தல்களும் இந்தப் பதிவினை சிற்க்கச் செய்யும் என நம்புகிறேன்.

உங்களின் ஆதரவோடு, எல்லாவற்றிற்கும் மேலான எனது குருநாதரின் அருளையும், ஆசியையும் வேண்டி வணங்கி இந்த பதிவினை துவங்குகிறேன்.


என்றும் நட்புடன்

தோழி