30 May 2011

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - கேது


கேது.






சோதிடவியலில் ஒன்பதாவது கோளான கேதுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.

கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை ஆகியனவாகும்.

உரிய பால் : அலிக் கிரகம்.

உரிய நிறம் : சிவப்பு.

உரிய இனம் : சங்கிரம இனம்.

உரிய வடிவம் : உயரம்.

உரிய அவயம் : கை, தோள்.

உரிய உலோகம் : துருக்கல்.

உரிய மொழி : அன்னிய மொழிகள்.

உரிய ரத்தினம் : வைடூரியம்.

உரிய ஆடை :
புள்ளிகளுடன் சிவப்பு (பல நிறங்கள்).

உரிய மலர் : செவ்வல்லி.

உரிய தூபம் : செம்மரம்.

உரிய வாகனம் : சிம்மம்.

உரிய சமித்து :
தர்ப்பை.

உரிய சுவை : உறைப்பு.

உரிய தான்யம் : கோதுமை.

உரிய பஞ்ச பூதம் :
ஆகாயம்.

உரிய நாடி : பித்த நாடி.

உரிய திக்கு :
வட மேற்கு.

உரிய அதி தேவதை : விநாயகர், சண்டிகேச்வரர்.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.

உரிய குணம் : தாமசம்.

உரிய ஆசன வடிவம் : மூச்சில்.

உரிய தேசம் : அந்தர்வேதி.

நட்புப் பெற்ற கோள்கள் :
சனி, சசுக்கிரன்.

பகைப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.

சமனான நிலை கொண்ட கோள்கள் : புதன்,குரு.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு :
ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடம்.

உரிய தெசா புத்திக் காலம் : ஏழு ஆண்டுகள்.

கேதுவின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.

பகை வீடு : கடகம், சிம்மம்.

ஆட்சி பெற்ற இடம் : மீனம்.

நீசம் பெற்ற இடம் : சிம்மம்.

உச்சம் பெற்ற இடம் :
கும்பம்.

மூலதிரி கோணம் : சிம்மம்.

உரிய உப கிரகம் : தூமகேது.

உரிய காரகத்துவம் :
மதாமஹன்.

மதாமஹன் அதாவது மாதுர் பாட்டன் வம்சம், கபடத்தொழில், கீழ்குலத்தொழில், விபச்சாரம், பாபத்தொழில், பரதேச ஜீவனம், அக்னிகண்டம் இவைகளுக்கு எல்லாம் கேது தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"பலாஷ புஷ்ப ஸங்காஷம்
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||"

கேது காயத்ரி..

"அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்||"