03 March 2011

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - இராகு






இராகு.




சோதிடவியலில் எட்டாவது கோளான இராகுவிற்க்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.

கரும்பாம்பு , தமம், மதாப்பகை, மதாயுணி ஆகியனவாகும்.

உரிய பால் :
பெண் கிரகம்.

உரிய நிறம் :
கருமை.

உரிய இனம் : சங்கிரம இனம்.

உரிய வடிவம் : உயரம்.

உரிய அவயம் :
தொடை,பாதம், கணுக்கால்.

உரிய உலோகம் : கருங்கல்.

உரிய மொழி :
அன்னிய மொழிகள்.

உரிய ரத்தினம் : கோமேதகம்.

உரிய ஆடை :
கறுப்புடன் சித்திரங்கள் சேர்ந்தது.

உரிய மலர் :
மந்தாரை.

உரிய தூபம் :
கடுகு.

உரிய வாகனம் : ஆடு.

உரிய சமித்து : அறுகு.

உரிய சுவை : கைப்பு.

உரிய தான்யம் :
உளுந்து.

உரிய பஞ்ச பூதம் :
ஆகாயம்.

உரிய நாடி : பித்த நாடி.

உரிய திக்கு : தென் மேற்கு.

உரிய அதி தேவதை : காளி,துர்க்கை, கருமாரியம்மன்.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.

உரிய குணம் :
தாமசம்.

உரிய ஆசன வடிவம் : கொடி.

உரிய தேசம் : பர்பர.

நட்புப் பெற்ற கோள்கள் : சனி, சசுக்கிரன்.

பகைப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.

சமனான நிலை கொண்ட கோள்கள் : புதன்,குரு.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடம்.

உரிய தெசா புத்திக் காலம் : பதினெட்டு ஆண்டுகள்.

இராகுவின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.

பகை வீடு : கடகம், சிம்மம்.

ஆட்சி பெற்ற இடம் : கன்னி.

நீசம் பெற்ற இடம் : ரிசபம்.

உச்சம் பெற்ற இடம் : விருச்சிகம்.

மூலதிரி கோணம் : கும்பம்.

உரிய உப கிரகம் :
வியதீபாதன்.

உரிய காரகத்துவம் :
பிதாமஹன்.

பிதாமஹன் அதாவது பிதுர் பாட்டன் வம்சம், களவு, சேவகத்தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமான தொழில், விகட வினோத வித்தைகள், குஷ்டம், நாள்பட்ட ரோகம், விஷ்பயம், அங்கவீனம், வெகு பேச்சு, ஜல கண்டம், வெட்டுக்காயம், சிரைப்படல் இவைகளுக்கு எல்லாம் இராகு தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"அர்த்தகாயம் மஹாவீர்யம்
சாந்த்ராதித்ய விமர்தநம்|
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹும் ப்ரணமாம்யஹம்||"

இராகு காயத்ரி..

"ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||"