15 December 2010

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - செவ்வாய்.



செவ்வாய்.



சோதிடவியலில் மூன்றாவது கோளான செவ்வாய்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப் படுகிறது.

அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தி, வண்ணன், சேய், நிலமகள், பௌமன், மங்கலன், வக்கிரன் ஆகியனவாகும்.

உரிய பால் : ஆண் கிரகம்.

உரிய நிறம் : சிவப்பு நிறம்.

உரிய இனம் : சத்திரிய இனம்.

உரிய வடிவம் : குள்ள மான உயரம்.

உரிய அவயம் : கை, தோள்.

உரிய உலோகம் : செம்பு.

உரிய மொழி : தெலுங்கு, தமிழ்.

உரிய ரத்தினம் : பவளம்.

உரிய ஆடை : நல்ல சிவப்பு (பவள நிறம்) நிற ஆடை.

உரிய மலர் : செண்பகம்.

உரிய தூபம் : குங்கிலியம்.

உரிய வாகனம் : செம்போத்து, சேவல்.

உரிய சமித்து : கருங்காலி.

உரிய சுவை : உறைப்பு.

உரிய பஞ்ச பூதம் : பிருதிவி.

உரிய நாடி : பித்த நாடி.

உரிய திக்கு : தெற்கு.

உரிய அதி தேவதை : சுப்ரமண்யர்.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.

உரிய குணம் : ராசஜம்.

உரிய ஆசன வடிவம் : முக்கோணம்.

உரிய தேசம் : அவந்தி.

நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், வியாழன்.

பகைப் பெற்ற கோள்கள் : புதன், இராகு, கேது.

சமனான நிலை கொண்ட கோள்கள் : சனி, சுக்கிரன்.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை மாதங்கள்.

உரிய தெசா புத்திக் காலம் : ஏழு ஆண்டுகள்.

செவ்வாயின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : சிம்மம், தனுசு, மீனம்.

பகை வீடு : மிதுனம், கன்னி.

ஆட்சி பெற்ற இடம் : மேஷம், விருச்சிகம்.

நீசம் பெற்ற இடம் : கடகம்.

உச்சம் பெற்ற இடம் : மகரம்.

மூலதிரி கோணம் : மேஷம்.

உரிய உப கிரகம் : தூமன்.

உரிய காரகத்துவம் : பிராத்ருக் காரகன்.

சகோதரன், பூமி, சுப்பிரமணியர், கோபம், குயவன், யுத்தம், இரத்தம், செம்பு, பவளம், அக்கினிபயம், கடன், உற்சாகம், அதிகாரம், அடுதி மரணம் இவைகளுகு எல்லாம் செவ்வாய் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாத ருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்குவாய் போற்றி போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரபம்|
குமாரம் ஸக்திஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யகம்||"

செவ்வாய் காயத்ரி..

"ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்||"


Post a Comment

0 comments:

Post a Comment