21 January 2011

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - சுக்கிரன்.


சுக்கிரன்.

சோதிடவியலில் ஆறாவது கோளான சுக்கிரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.

அசுரர்மந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சீதகன், சுங்கன், தயித்திய மந்திரி,நற்கோள், பளிங்கு, பார்கவன்,பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வெள்ளி ஆகியனவாகும்.

உரிய பால் : பெண் கிரகம்.

உரிய நிறம் : வெண்மை.

உரிய இனம் : பிராமண இனம்.

உரிய வடிவம் : சம உயரம்.

உரிய அவயம் : மர்மஸ்தானம்.

உரிய உலோகம் : வெள்ளி.

உரிய மொழி : ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.

உரிய ரத்தினம் :
வைரம்.

உரிய ஆடை : பட்டிப் போன்றவெண்மை.

உரிய மலர் : வெண்தாமரை.

உரிய தூபம் : லவங்கம்.

உரிய வாகனம் : குதிரை, மாடு.

உரிய சமித்து : அத்தி.

உரிய சுவை : புளிப்பு.

உரிய தான்யம் : மொச்சை.

உரிய பஞ்ச பூதம் : அப்பு.

உரிய நாடி : சிலேத்தும நாடி.

உரிய திக்கு : தென்கிழக்கு.

உரிய அதி தேவதை : இலக்குமி, வருணன்.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : ஸ்திரக் கோள்.

உரிய குணம் : ரஜசம்.

உரிய ஆசன வடிவம் : ஐங்கோணம்.

உரிய தேசம் : காம்போஜம்

நட்புப் பெற்ற கோள்கள் : புதன், சனி, இராகு, கேது.

பகைப் பெற்ற கோள்கள் :
சூரியன், சந்திரன்.

சமனான நிலை கொண்ட கோள்கள் :
செவ்வாய்,குரு.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம்.

உரிய தெசா புத்திக் காலம் : இருபது ஆண்டுகள்.

சுக்கிரனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,8ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : மேடம், விருச்சிகம், மிதுனம், மகரம், கும்பம்.

பகை வீடு : கடகம், சிம்மம், தனுசு.

ஆட்சி பெற்ற இடம் : ரிஷபம், துலாம்.

நீசம் பெற்ற இடம் : கன்னி.

உச்சம் பெற்ற இடம் : மீனம்.

மூலதிரி கோணம் : துலாம்.

உரிய உப கிரகம் : இந்திரதனுசு.

உரிய காரகத்துவம் :
களத்திர காரகன்.

களத்திரம், கிருகம், சங்கீதம், பரத நாட்டியம் போன்றவற்றில் பிரியம் ஏற்படுதல், ஆசை, ஸ்ரீ தேவதை உபசனை, அழகு, இளமை, இலக்குமி கடாட்சம், ஆகாய சமுத்திர யாத்திரைகள், இவைகளுக்கு எல்லாம் சுக்கிரன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)..

"சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"ஹிமகுந்த ம்ருணாலாபம்
தத்யாநாம் பரமம் குரும்|
ஸர்வஷாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யகம்||"

சுக்கிரன் காயத்ரி..

"ஓம் அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||"Post a Comment

0 comments:

Post a Comment