08 November 2010

ஜோதிடம் - வகைகள்..!

ஜோதிடம் என்றால், கோள்களின் நகர்வுகள் அவற்றின் ஊடாக அமையப் பெற்ற ராசி மண்டலங்கள், அதில் உள்ளடங்கி இருக்கு நட்சத்திரங்கள் என்பதன் அறிவியலாக மட்டுமே பொதுவில் அறியப் பட்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடம் என்பது பல்வேறு முறைகளையும், வகைகளையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பு என்பதே சரியாகும்.

ஜோதிட இயலில் சித்தர்களின் பங்களிப்பு அளப்பறியது. அவர்கள் வகுத்தளித்த பல முறைகள் முற்றிலுமாகவே நமக்கு கிடைக்கவில்லை. சிலவற்றின் பெயர்கள் மட்டுமே காணக் கிடைக்கிறது. இழந்தவற்றைப் பற்றி கவலைப் படுவதைக் காட்டிலும், நமக்கு கிடைத்தவற்றை, குருவருளினால் மேலும் ஆக்கப் பூர்வமாய் பயன்படுத்திக் கொள்ள முனைவதே இந்த பதிவுகளின் நோக்கம்.

நம்மிடம் இருக்கும் சித்தர்களின் பாடற் தொகுப்பில் இருந்து நமக்கு ஆறு வகையான ஜோதிட முறைகள் கிடைத்திருக்கின்றன.


சோதிட சாத்திரம்.
இவை எல்லாமே வானில் உள்ள கோள்களின் அமைப்பு மற்றும் கோளின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

பஞ்ச பட்சி சாத்திரம்.
ஐந்து வகையான பறவை இனங்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

மனையடி சாத்திரம்.
வீடு, கட்டடங்கள், விவசாய நிலங்களின் தன்மைகளையும் அவற்றை தக்க வகையில் அமைத்துப் பயன்படுத்தும் முறைகளை கணிக்கும் முறை.

விருட்ச சாத்திரம்.
குறிப்பிட்ட மரங்களை வளர்ப்பதன் மூலம் வளர்ப்பவருக்கு கிடைக்கும் நன்மைகளையும், மரத்தின் தன்மைகளையும் கொண்டு கணிக்கும் முறை.

உடற் சாத்திரம்.
மனிதனின் உடலில் உள்ள அவயங்களின் அமைப்பு, அளவுகள், தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

ஆரூடம்
செய்யப் போகும் காரியம், அல்லது குறிப்பிட்ட செயலின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே கணிக்கும் முறை.


இந்த அனத்துமே மனித சமூகத்தின் நலனை முன்வைத்தே கணிக்கப்படுகிறது. இந்த முறைகளில் கணிக்கப் படும் கணிப்புகள் தவறாகாது என்று சித்தர் பாடல்களில் காணப் படுகிறது. மேலும் இந்த கலைகள் தீயவர்கள் கைக்கு சென்றுவிடக் கூடாது என்பதிலும் சித்தர்கள் உறுதியாக இருந்ததும் தெரிகிறது.

இனிவரும் பதிவுகளில் இந்த முறைகளையும், அவற்றின் வகைகளையும் அதன் கூறுகளைப் பற்றி நானறிந்த வகையில் விளக்கிட முயற்சிக்கிறேன்.

பின்குறிப்பு: நாடி சோதிடம் பற்றிய எனது பதிவின் இணைப்பு இங்கே காணக் கிடைக்கும். விரைவில் இங்கே அதனை மீள் பதிவாக்குகிறேன்...



Post a Comment

6 comments:

chandru2110 said...

சித்தர்களோட ஜோதிட சாஸ்திரமாவது இன்னும் அழியாம தமிழ் மக்களிடையே உபயோகத்தில் இருக்கு, மகிழ்ச்சியா இருக்கு.

jagadeesh said...

அருமை. இதில் உள்ள ஆறு வகையை பற்றி நன்றாக விளக்கி கூறுவீர்கள் ( பாடம் எடுப்பீர்கள்) என்று நம்புகிறேன். கையில நோட்டு, புக்கு, பேனா எல்லாம் எடுத்துட்டோம்,, ம்ம்.. ஆரம்பியுங்க.

Jeyamaran said...

hello madam சித்தர்கள் ஆராச்சி வேண்டாம் ஜெயமாறன் என்று ஒரு பெரிய தலைவர் இருக்கார் அவர பத்தி ஆராச்சி பண்ணுக

Guruvadi Saranam said...

தோழி,
தாங்கள் துவங்கிஇருக்கும் இந்த வலை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !
நீங்கள் கூரியுள்ளபடி ஜோதிட வகைகளை அதை கற்று பயன்படுத்தும் முறையில் தனி தனியாக விவரித்தால் நன்றாக இருக்கும்.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்

kandhan said...

ஒரு விண்ணப்பம்: விருட்ச சாஸ்திரம் பற்றிய பதிவுகள் போடவும். :)

சித்தமருத்துவ தடயங்கள் said...

very useful blog.Any idea about medico astrology?

Post a Comment