சனி.

சோதிடவியலில் ஏழாவது கோளான சனிக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சுந்தில், சவுரி, சாவகன், தமணியன், நீலன், நோய்முகன், பங்கு, மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள் ஆகியனவாகும்.
அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சுந்தில், சவுரி, சாவகன், தமணியன், நீலன், நோய்முகன், பங்கு, மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள் ஆகியனவாகும்.
உரிய பால் : அலிக் கிரகம்.
உரிய நிறம் : கருமை.
உரிய இனம் : சூத்திர இனம்.
உரிய வடிவம் : குள்ள உயரம்.
உரிய அவயம் : தொடை,பாதம், கணுக்கால்.
உரிய உலோகம் : இரும்பு.
உரிய மொழி : அன்னிய மொழிகள்.
உரிய ரத்தினம் : நீலம்.
உரிய ஆடை : கறுப்பு.
உரிய மலர் : கருங்குவளை.
உரிய தூபம் : கருங்காலி.
உரிய வாகனம் : காகம், எருமை.
உரிய சமித்து : வன்னி.
உரிய சுவை : கைப்பு.
உரிய தான்யம் : எள்.
உரிய பஞ்ச பூதம் : ஆகாயம்.
உரிய நாடி : வாத நாடி.
உரிய திக்கு : மேற்கு.
உரிய அதி தேவதை : யமன், சாஸ்தா.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : உபயக் கோள்.
உரிய குணம் : தாமசம்.
உரிய ஆசன வடிவம் : வில்.
உரிய தேசம் : செளராஷ்டிரம்.
நட்புப் பெற்ற கோள்கள் : புதன், சசுக்கிரன், இராகு, கேது.
பகைப் பெற்ற கோள்கள் : சூரியன், சந்திரன், செவ்வாய்.
சமனான நிலை கொண்ட கோள்கள் : குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் இரெண்டரை வருடம்.
உரிய தெசா புத்திக் காலம் : பத்தொன்பது ஆண்டுகள்.
சனியி மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : ரிஷபம், மிதுனம்.
பகை வீடு : கடகம், சிம்மம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் : மகரம்,கும்பம்.
நீசம் பெற்ற இடம் : மேடம்.
உச்சம் பெற்ற இடம் : துலாம்.
மூலதிரி கோணம் : கும்பம்.
உரிய உப கிரகம் : குளிகன்.
உரிய காரகத்துவம் : ஆயுள் காரகன்.
தீர்க்க ஆயுள், ஜீவன, இரும்பு, சேவகர் விருத்தி, களவு, ஆத்ம இம்சை, சிறைப்படல், ராஜதண்டனை, வீண்வார்த்தை, சித்தப்பிரம்மை, வாயடித்தல், மயக்க போஜனம், அவயக் குறைவு, மரவேலை, ஆளடிமை இவைகளுக்கு எல்லாம் சனி தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தருவாய் போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்|
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸநைச்சரம்||"
சனி காயத்ரி..
"ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||"
Post a Comment
6 comments:
good...
நண்றி
nalla visayangal
Excellent page. please continue soon.
Thanks
saravanan.V
Coimbatore.
Sani Gayanthiri in Tamil!!
ஒன்பது கோள் நாயகனே சனீஸ்வரா தழைத்து எழு நீ வாழியவே
சனீஸ்வர பகவானே அறியா வித்தைகளின் மகவே.
பங்கு வழங்கு ஆதாயம் தீயில் மகிழவே, உன்னோடு மந்தநிலை அந்திநிலை பிரச்சினைகள் அற்றிடட்டும்
காக்கையேறு கருணாகர ஈசுவரனே கவலை அகற்றிக்காத்திடுக !!
நன்றிகள் பல
Post a Comment