சந்திரன்.
சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.
அமுக்கதிரோன், அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச் , அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இவன், உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், கண்ணவன்,தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர், மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, விபத்து, வெண்கதிரோன், வேந்தன் ஆகியனவாகும்.
உரிய பால் : பெண் கிரகம்.
உரிய நிறம் : வெண்மை நிறம்.
உரிய இனம் : வைசிய இனம்.
உரிய வடிவம் : குள்ள மான உயரம்.
உரிய அவயம் : முகம், வயிறு.
உரிய உலோகம் : ஈயம்.
உரிய மொழி : இல்லை.
உரிய ரத்தினம் : முத்து.
உரிய ஆடை : வெண்மை (முத்து வெண்மை) நிற ஆடை.
உரிய மலர் : வெள்ளை அலரி.
உரிய தூபம் : சாம்பிராணி.
உரிய வாகனம் : முத்து விமானம்.
உரிய சமித்து : முருக்கு.
உரிய சுவை : உப்பு.
உரிய பஞ்ச பூதம் : அப்பு.
உரிய நாடி : சிலேத்தும நாடி.
உரிய திக்கு : வடமேற்கு.
உரிய அதி தேவதை : பார்வதி.
உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : சரக் கோள்.
உரிய குணம் : வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் கொடூரம்.
உரிய ஆசன வடிவம் : சதுரம்.
உரிய தேசம் : யமுனா.
நட்புப் பெற்ற கோள்கள் : சூரியன், புதன்.
பகைப் பெற்ற கோள்கள் : இராகு, கேது.
சமனான நிலை கொண்ட கோள்கள் : செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் இரெண்டேகால் நட்சத்திர அளவு.
உரிய தெசா புத்திக் காலம் : பத்து ஆண்டுகள்.
சந்திரனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு : மிதுனம், சிம்மம், கன்னி.
பகை வீடு : எல்லா வீடுகளும் நட்பு ( பகைவீடு கிடையாது).
ஆட்சி பெற்ற இடம் : கடகம்.
நீசம் பெற்ற இடம் : விருச்சிகம்.
உச்சம் பெற்ற இடம் : ரிஷபம்.
மூலதிரி கோணம் : ரிஷபம்.
உரிய உப கிரகம் : பரிவேடன்.
உரிய காரகத்துவம் : மாத்ரு காரகன்.
மேலும் பராசக்தி, கணபதி, சுகபோசனம், வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை, சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம், ஸ்நானாதிகம் இவைகளுக்கு எல்லம் சந்திரன் தான் காரகன்.
தியான சுலோகம் (தமிழ்)..
"எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி போற்றி"
தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..
"ததிஸங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்|
நமாமி ஸஸிநம் ஸோமம்
ஸம்போர் மகுட பூஷணம்||"
சந்திர காயத்ரி..
"ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||"
Post a Comment
2 comments:
நன்றி நன்றி மிக்க நன்றிகள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.
நனைவோமா ?
மிக்க அருமையாக உள்ளது,மேலும் ஜோதிடம் சார்ந்து தொடர்ந்து எழுதுங்கள்.எனது அர்ச்சகர் குரல் forum ல் இணைந்து ஜோதிடப்பகுதியில் தங்கள் பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.தங்களால் இயலாத பக்ஷத்தில் தங்கள் பதிவை copy past செய்ய அனுமதி அளிக்கவும்.நன்றி
Post a Comment