02 November 2010

ஜோதிடம்..?

பெருவெளியில் அமைந்திருக்கும் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் தனித்துவமான விட்டம், இயல்பு, ஆற்றலைக் கொண்டவை என்பதை தற்கால அறிவியல் ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறது. இதில் பூமியில் மட்டுமே உயிரிங்கள் வாழும் சூழல் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தற்போதைய அறிவியல் ஆய்வு வசதிகள் ஏதுமில்லாத ஓர் கால கட்டத்தில் நமது முன்னோர்கள் ஒன்பது கோள்களையும் அவற்றின் குணாதிசியங்களையும், அவற்றின் நகர்வுகளையும் அவதானித்து குறித்து வைத்தனர். இந்த கோள்களின் நகர்வுகள், சேர்க்கைகள், ஒன்று மற்றதன் அருகில் வரும்போது பூமியில் உண்டாக்கும் மாற்றங்களையும், அதனால் உண்டான விளைவுகள் என எல்லாவற்றையும் விவரமாகவும், விளக்கமாயும் பதிந்து வைத்தனர்.

இந்த வகையில் ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் ஒவ்வொரு கோளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் குறித்து வைத்து பின்னர் அவனுடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கும், இந்த கோள்களின் நகர்வுகளுக்கும் தொடர்பு படுத்திய ஒரு முயற்சிதான் ஜோதிடம் என்பதன் ஆரம்பமாய் இருந்திருக்க வேண்டும்.பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த இந்த கணிப்புகள், கால ஓட்டத்தில் மெருகேற்றப் பட்டு இன்ன நிலையில் கோள்கள் அமைவதால் இன்ன பலன் உண்டாகும் என்பதாக ஒரு வரையறைக்குள் கொண்டு வரப் பட்டிருக்க வேண்டும்.

இன்னும் எளிமையாக சொல்வதானால் சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களும் ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் எந்த நிலையில் உள்ளது என்று கணக்கிடுவதன் மூலம் அந்த மனிதனின் சென்ற காலம்,நிகழ் காலம்,வரும் காலம், என்ற மூன்று காலங்களையும் கணக்கிடுதல். இதுவே சோதிடத்தின் அடிப்படை. துனைக் கண்டத்தின் ஜோதிட முறைக்கு பொதுவில் இந்திய வண்ணம் பூசப் பட்டாலும், இந்த இயலில் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது என்பதை இந்த இடத்தில் பதிந்து வைக்க விரும்புகிறேன். அதை நுணுகி ஆய்வதே இந்த பதிவின் நோக்கமாக இருக்கும்.

இனிவரும் பதிவுகளில் பண்டைத் தமிழரின் ஜோதிட கட்டமைப்பினையும், அதன் கூறுகளைப் பற்றி நானறிந்த வகையில் விளக்கிட முயற்சிக்கிறேன்...



Post a Comment

9 comments:

அஸ்ரோ இ.ஏ. மாரிசெட்டி said...

நல்ல படைப்பு .....
வரவேற்க தக்கது...........
வாழ்த்தி வணங்குகிறேன்...

தமிழ் அமுதன் said...

வாழ்த்துகள்...! தொடருங்கள்...!

jagadeesh said...

தளத்தின் வடிவமைப்பு நன்றாக உள்ளது. தொடருங்கள்.

Prakash said...

Tholi
Jothidam kathukanum ennaku aavalaka thaan irunthathu. unkakita irunthu neraya kathukuven nenaikuren.

ungaludaiya pani menmelum serakka en vaalthukkal...
by
Prakash

அருட்சிவஞான சித்தர் said...

நல்ல துவக்கம், இதுவரை யாரும் சொல்லாத பரிணாமத்தில் சிறப்பாக பதிவு உள்ளது.
தொடருங்கள்.............

Praveenkumar said...

தொடர்ந்து தளம் சிறப்படைய வாழ்த்துகள்..!

Siva chakra said...

நெஞ்சார்ந்த வாழ்த்துகள் .....

vinnoli said...

உங்களுடைய இந்த தளம் பயனுள்ளதாக வளர என் வாழ்த்துக்கள் கவிராஜன்

"நாடி ஜோதிட நல்லாசான்"க.சேரன் D.A. said...

அன்புத்தோழிக்கு

வாழ்த்துக்கள்.

பொதுவாக ஜோதிடத்தை முதலில் எழுதியவர்கள் பாபிலோனியர்கள், கிரேக்கர்கள் என்று அனைவரும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.

உண்மையில் ஜிதிடத்தின் பூர்வீகம் தமிழகம்தான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

ஓரு ஆதாரம் இங்கு "திரு குணா அவர்கள் எழுதிய தமிழர் வரலாறு குறித்த ஆய்வுநூல் 'வள்ளுவத்தின் வீழ்ச்சி' "

Post a Comment