29 November 2010

கோள்களும் அவற்றின் தன்மைகளும் - சூரியன்..

சோதிடவியல் கோள்களின் நகர்வுகளை வைத்தே தீர்மானிக்கப் படுகிறது. நவீன அறிவியல் வசதிகள் ஏதுமில்லாத ஒரு காலத்திலேயே நமது முன்னோர்கள் கோள்களைப் பற்றியும் அவற்றின் குணாதிசயங்களைப் பற்றியும் அவற்றின் பாதிப்புகள் குறித்தும் அறிந்து தெளிந்து அருளியிருக்கின்றனர்.

அத்தகைய தெளிவுகளில் இருந்து ஒவ்வொரு கோளின் தன்மைகளை பட்டியலிடும் முயற்சியில், தலைமைக் கோளான சூரியன் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

சூரியன்.



சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்க்ள் வழங்கப் படுகிறது.

அண்டயோனி, அரி, அரியமா, அருக்கன், அருணன், அலரி, அழரவன், அனலி, ஆதவன், ஆதவன், ஆயிரஞ்சோதி, இதவு, இருள்வலி, இனன், உதயம், எல், எல்லை, எல்லோன், என்றுள், எழ்ப்ரியோன் , ஒளி, ஒளியோன் , கதிரவன், கனவி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்ரபானு, சுடரோன், சூரன், செங்கதிரோன் , சோதி, ஞாயிறு ,தபணன், தரணி, திவாகரன், தினகரன், தனமணி, நாபாமணி, பகலோன், பகல், பங்கயன், பதங்கன், பரிகி, பர்க்கன், பனிப்பகை, பானு, மார்த்தாண்டன், மித்திரன், விசுரத்தனன், விண்மனி, விரிச்சிகன் , விரோசனன் , வெஞ்சுடர், வெயில், வேய்யோன் ஆகியனவாகும்.

உரிய பால் : ஆண் கிரகம்.

உரிய நிறம் : வெண்மை நிறம்.

உரிய இனம் : சத்திரிய இனம்.

உரிய வடிவம் : சம உயரம்.

உரிய அவயம் : தலை.

உரிய உலோகம் : தாமிரம்.

உரிய மொழி : சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளாம்.

உரிய ரத்தினம் : மாணிக்கம்.

உரிய ஆடை : சிவப்பு (இரத்த சிவப்பு) நிற ஆடை.

உரிய மலர் : செந்தாமரை.

உரிய தூபம் : சந்தனம்.

உரிய வாகனம் : மயில், தேர்.

உரிய சமித்து : எருக்கு.

உரிய சுவை : துவர்ப்பு.

உரிய பஞ்ச பூதம் : தேயு.

உரிய நாடி : பித்த நாடி.

உரிய திக்கு : கிழக்கு.

உரிய அதி தேவதை : சிவன்.

உரிய தன்மை (சர - சத்திர - உபயம் ) : நிலையான கோள்.

உரிய குணம் : மந்தம்(தாமஸ்ம்).

உரிய ஆசன வடிவம் : வட்டம்.

உரிய தேசம் : கலிங்கம்.

நட்புப் பெற்ற கோள்கள் : சந்திரன், வியாழன், செவ்வாய்.

பகைப் பெற்ற கோள்கள் : சுக்கிரன், சனி, ராகு, கேது.

சமனான நிலை கொண்ட கோள் : புதன்.

ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு : ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம்.

உரிய தெசா புத்திக் கா லம்: ஆறு ஆண்டுகள்.

சூரியனின் மறைவு ஸ்தானம் : லக்கினத்துக்கு 8,12ல் இருந்தால் மறைவு.

நட்பு வீடு : விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.

பகை வீடு : ரிஷபம், மகரம், கும்பம்.

ஆட்சி பெற்ற இடம் : சிம்மம்.

நீசம் பெற்ற இடம் : துலாம்.

உச்சம் பெற்ற இடம் : மேடம்.

மூலதிரி கோணம் : சிம்மம்.

உரிய உப கிரகம் : காலன்.

உரிய காரகத்துவம் : சூரியன் பித்ருகாரகன்.

மேலும் பிதா, ஆத்மா, சிராசு, தந்தம், வலது நேத்ரம், பித்தம், ஒருதலை நோவு போன்ற சிரசு ரோகங்கள், சித்தசுவாதீனம், சௌரியம், பிரதாபம், தைரியம், இராஜசேவை, அரச உத்தியோகம், யாத்திரை, கிராம சஞ்சாரம், இரசவாதம், யானை, மலை, காடு, தபசு, சைவானுஷ்டானம் இவைகளுக்கு எல்லாம் சூரியன்தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்).

"சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள்
களைவாய் போற்றி போற்றி"

தியான சுலோகம் (சமஸ்கிருதம்).

"ஜபாகுஸும ஸங்காஷம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்|
தமோரிம் ஸர்வ பாபக்நம்
ப்ரணதோஸ்மி திவாகரம்||"

சூர்ய காயத்ரி.

"ஓம் அச்வ த்வஜாய வித்மஹே; பாசஹஸ்தாய தீமஹி
தன்நோ ஸூர்ய: ப்ரசோதயாத்||"

"ஓம் பாஸ்கராய வித்மஹே; மஹத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||"

11 November 2010

குரு பெயர்கிறார்...

குரு பகவான் 11.11.2010 அன்று அதி காலை 1 மணி அளவில் மீனராசியில் இருந்து கும்பராசிக்கு வக்கிர கதியில் இடம் பெயர்கிறார். இவர் மீண்டும் 22.11.2010 அன்று காலை 7 மணி அளவில் கும்ப ராசியில் இருந்து மீண்டும் மீன ராசிக்கே இடம் பெயர்கிறார் இந்த இடைப்பட்ட கால அளவில் எந்த ராசிக்கும் பெரிதாக நன்மையோ தீமையோ ஏற்பட வாய்ப்பில்லை.


08 November 2010

ஜோதிடம் - வகைகள்..!

ஜோதிடம் என்றால், கோள்களின் நகர்வுகள் அவற்றின் ஊடாக அமையப் பெற்ற ராசி மண்டலங்கள், அதில் உள்ளடங்கி இருக்கு நட்சத்திரங்கள் என்பதன் அறிவியலாக மட்டுமே பொதுவில் அறியப் பட்டிருக்கிறது. உண்மையில் ஜோதிடம் என்பது பல்வேறு முறைகளையும், வகைகளையும் உள்ளடக்கிய ஒரு தொகுப்பு என்பதே சரியாகும்.

ஜோதிட இயலில் சித்தர்களின் பங்களிப்பு அளப்பறியது. அவர்கள் வகுத்தளித்த பல முறைகள் முற்றிலுமாகவே நமக்கு கிடைக்கவில்லை. சிலவற்றின் பெயர்கள் மட்டுமே காணக் கிடைக்கிறது. இழந்தவற்றைப் பற்றி கவலைப் படுவதைக் காட்டிலும், நமக்கு கிடைத்தவற்றை, குருவருளினால் மேலும் ஆக்கப் பூர்வமாய் பயன்படுத்திக் கொள்ள முனைவதே இந்த பதிவுகளின் நோக்கம்.

நம்மிடம் இருக்கும் சித்தர்களின் பாடற் தொகுப்பில் இருந்து நமக்கு ஆறு வகையான ஜோதிட முறைகள் கிடைத்திருக்கின்றன.


சோதிட சாத்திரம்.
இவை எல்லாமே வானில் உள்ள கோள்களின் அமைப்பு மற்றும் கோளின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

பஞ்ச பட்சி சாத்திரம்.
ஐந்து வகையான பறவை இனங்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

மனையடி சாத்திரம்.
வீடு, கட்டடங்கள், விவசாய நிலங்களின் தன்மைகளையும் அவற்றை தக்க வகையில் அமைத்துப் பயன்படுத்தும் முறைகளை கணிக்கும் முறை.

விருட்ச சாத்திரம்.
குறிப்பிட்ட மரங்களை வளர்ப்பதன் மூலம் வளர்ப்பவருக்கு கிடைக்கும் நன்மைகளையும், மரத்தின் தன்மைகளையும் கொண்டு கணிக்கும் முறை.

உடற் சாத்திரம்.
மனிதனின் உடலில் உள்ள அவயங்களின் அமைப்பு, அளவுகள், தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

ஆரூடம்
செய்யப் போகும் காரியம், அல்லது குறிப்பிட்ட செயலின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே கணிக்கும் முறை.


இந்த அனத்துமே மனித சமூகத்தின் நலனை முன்வைத்தே கணிக்கப்படுகிறது. இந்த முறைகளில் கணிக்கப் படும் கணிப்புகள் தவறாகாது என்று சித்தர் பாடல்களில் காணப் படுகிறது. மேலும் இந்த கலைகள் தீயவர்கள் கைக்கு சென்றுவிடக் கூடாது என்பதிலும் சித்தர்கள் உறுதியாக இருந்ததும் தெரிகிறது.

இனிவரும் பதிவுகளில் இந்த முறைகளையும், அவற்றின் வகைகளையும் அதன் கூறுகளைப் பற்றி நானறிந்த வகையில் விளக்கிட முயற்சிக்கிறேன்.

பின்குறிப்பு: நாடி சோதிடம் பற்றிய எனது பதிவின் இணைப்பு இங்கே காணக் கிடைக்கும். விரைவில் இங்கே அதனை மீள் பதிவாக்குகிறேன்...


02 November 2010

ஜோதிடம்..?

பெருவெளியில் அமைந்திருக்கும் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் தனித்துவமான விட்டம், இயல்பு, ஆற்றலைக் கொண்டவை என்பதை தற்கால அறிவியல் ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறது. இதில் பூமியில் மட்டுமே உயிரிங்கள் வாழும் சூழல் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தற்போதைய அறிவியல் ஆய்வு வசதிகள் ஏதுமில்லாத ஓர் கால கட்டத்தில் நமது முன்னோர்கள் ஒன்பது கோள்களையும் அவற்றின் குணாதிசியங்களையும், அவற்றின் நகர்வுகளையும் அவதானித்து குறித்து வைத்தனர். இந்த கோள்களின் நகர்வுகள், சேர்க்கைகள், ஒன்று மற்றதன் அருகில் வரும்போது பூமியில் உண்டாக்கும் மாற்றங்களையும், அதனால் உண்டான விளைவுகள் என எல்லாவற்றையும் விவரமாகவும், விளக்கமாயும் பதிந்து வைத்தனர்.

இந்த வகையில் ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் ஒவ்வொரு கோளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் குறித்து வைத்து பின்னர் அவனுடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கும், இந்த கோள்களின் நகர்வுகளுக்கும் தொடர்பு படுத்திய ஒரு முயற்சிதான் ஜோதிடம் என்பதன் ஆரம்பமாய் இருந்திருக்க வேண்டும்.பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த இந்த கணிப்புகள், கால ஓட்டத்தில் மெருகேற்றப் பட்டு இன்ன நிலையில் கோள்கள் அமைவதால் இன்ன பலன் உண்டாகும் என்பதாக ஒரு வரையறைக்குள் கொண்டு வரப் பட்டிருக்க வேண்டும்.

இன்னும் எளிமையாக சொல்வதானால் சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களும் ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் எந்த நிலையில் உள்ளது என்று கணக்கிடுவதன் மூலம் அந்த மனிதனின் சென்ற காலம்,நிகழ் காலம்,வரும் காலம், என்ற மூன்று காலங்களையும் கணக்கிடுதல். இதுவே சோதிடத்தின் அடிப்படை. துனைக் கண்டத்தின் ஜோதிட முறைக்கு பொதுவில் இந்திய வண்ணம் பூசப் பட்டாலும், இந்த இயலில் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது என்பதை இந்த இடத்தில் பதிந்து வைக்க விரும்புகிறேன். அதை நுணுகி ஆய்வதே இந்த பதிவின் நோக்கமாக இருக்கும்.

இனிவரும் பதிவுகளில் பண்டைத் தமிழரின் ஜோதிட கட்டமைப்பினையும், அதன் கூறுகளைப் பற்றி நானறிந்த வகையில் விளக்கிட முயற்சிக்கிறேன்...